மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களைப் பற்றி, அவதூறாக பேசிய துணை நடிகர் மீது, கட்சியின் சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
10-08-2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களைப் பற்றி அவதூறாகவும், வன்முறையாகவும் வலைதள நேர்காணலில் பேசிய, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில், கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா அவர்கள் புகார் மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் திரு. கவிஞர் சினேகன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ், திரு. அர்ஜுனர், சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன், வழக்கறிஞர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாவட்டச் செயலாளர்கள் திரு. உதயகுமார், திரு. சைதை ஜெ. கதிர், திரு சண்முகசுந்தரம், திரு. கோவிந்தராஜ், திரு. பாலமுருகன், திரு. மாறன் திரு. முசாபர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.