மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன்.
17/07/2025
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், இன்று (17-07-2025) தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ரவிக்குமார் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின்
பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.